முழுமையான பேரழிவுக்கு தயாராகும் மனிதகுலம் : முன்னோக்கி நகர்த்தப்பட்ட டூம்ஸ்டே கடிகாரம்!
மனிதகுலம் ஒரு முழுமையான பேரழிவுக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் அமைக்கப்படும் டூம்ஸ்டே கடிகாரம், ஒரு வினாடி முன்னோக்கி நகர்த்தப்பட்டு, நள்ளிரவுக்கு 89 வினாடிகள் நெருக்கமாக உள்ளது.
டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரத்தை நிர்ணயிக்கும் குழுவான புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ், பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து அழிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் கணிக்க 1947 இல் இதை அறிமுகப்படுத்தியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கடிகாரம் 90 வினாடிகளில் உள்ளது, இருப்பினும் அணுசக்தி அச்சுறுத்தல், மத்திய கிழக்கில் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளால், இது 60 வினாடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
புல்லட்டின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு வாரியத்தின் தலைவர் டேனியல் ஹோல்ஸ், சமீபத்திய நடவடிக்கையை “அனைத்து உலகத் தலைவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை” என்று அழைத்தார்.
“கடிகாரத்தை நள்ளிரவுக்கு ஒரு வினாடி அருகில் அமைப்பதன் மூலம், நாங்கள் ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.