செய்தி விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை

போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 255 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 255 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு திங்கட்கிழமை இந்தத் தடையை உறுதிப்படுத்தியது.

41 வயதான ரொனால்டோ, பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.

நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாததுடன், அணியில் தனது பங்கு தொடர்பாகப் பயிற்சியாளர் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, டென்மார்க்கில் நடைபெற்ற அடுத்த போட்டிக்கான போர்ச்சுகல் அணியின் முகாமிலிருந்து ரொனால்டோ வெளியேறினார். எனினும், ரொனால்டோவுடன் எந்தவித உடன்பாடும் செய்துகொள்ளவில்லை எனப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் மறுத்திருந்தார்.

நவம்பர் 14-ம் தேதிதிகதி டென்மார்க்கை சொந்த மண்ணில் போர்ச்சுகல் எதிர்கொள்கிறது. அதன்பின் நவம்பர் 17-ம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிராக வெளிநாட்டில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளில் ரொனால்டோ பங்கேற்பாரா என்பது, விதிக்கப்பட்ட 30 நாள் தடையின் நடைமுறை மற்றும் ஏற்கனவே அனுபவித்த தற்காலிகத் தடைக் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதிலேயே தெரியவரும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி