உலகம் செய்தி

“நான் உன்னை நேசிக்கிறேன்” – எப்ஸ்டீன் கோப்பில் இருந்து கசிந்த காதல் கடிதம்!

  • December 19, 2025
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீன் எஸ்டேட் (Jeffrey Epstein) புகைப்படங்களின் சமீபத்திய தொகுப்பில் காதல் கடிதம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஷெரிப் அலுவலக (Sheriff’s Office) கைதி ஒருவரின் கோரிக்கை படிவம் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் “என் வாழ்க்கையின் காதல்” மற்றும் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது. டிசம்பர் 25, 2008 எனத் திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தை யார் எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் கையெழுத்துக்கள் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) கையெழுத்துக்களுடன் ஒத்துப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த […]

ஐரோப்பா செய்தி

மூன்றாம் நாடுகளில் இருந்து ஐரோப்பா செல்வோருக்கு ஏற்படும் சிக்கல்!

  • December 19, 2025
  • 0 Comments

எல்லைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் புதிய டிஜிட்டல் எல்லைத் (EES) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் விமான நிலையங்களில் பயணிகள் ஏறக்குறைய 03 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் பயணிகள் (மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் பயணிகள்) இந்த சிக்கல்களை எதிர்கொள்வார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் கைரேகைகள் மற்றும் முக பயோமெட்ரிக்ஸ் (facial biometrics) பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சர்வதேச விமான நிலைய கவுன்சில் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

துப்பாக்கிகளை மீளப்பெறுகிறது ஆஸ்திரேலியா! தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

  • December 19, 2025
  • 0 Comments

துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டத்தை ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று (19) இந்த தகவலை வெளியிட்டார். சிட்னி, போண்டியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூத சமூகம் உட்பட நாட்டில் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கமைய துப்பாக்கிச்சட்டங்களும் கடுமையாக்கப்படவுள்ளன. இதற்குரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேசிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன. இதன்ஓர் அங்கமாகவே […]

உலகம் செய்தி

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை : சில ஊடகங்கள் தீக்கிரை!

  • December 19, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina)  பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த இளைஞர் இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi)  மரணித்ததை தொடர்ந்து  வன்முறை வெடித்துள்ளது. டாக்காவில் உள்ள ஒரு மசூதியை விட்டு அவர் வெளியேறியபோது முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் குறித்த செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு கருணை காட்டுவாரா ட்ரம்ப்? சஜித் கூறும் யோசனை என்ன?

  • December 19, 2025
  • 0 Comments

“போர் முடிவடைந்த பின்னர் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவிருந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டது. அந்த தவறை மீண்டும் இழைத்துவிடக்கூடாது.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தார். “பேரிடரால் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும். சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக தெரியவில்லை. […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: மீண்டும் வரிசை யுகம்! அரசு மறுப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

“பேரிடர் நிலையால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற அச்சமூட்டும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வரிசை யுகம் ஏற்படாது, இலங்கை நிச்சயம் சிறப்பாக மீண்டெழும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். “பேரிடரால் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்படும், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இப்படியான அச்சமூட்டும் தகவல்கள் போலியானவை. அதனை எவரும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் ஏழு பேர் கைது! போண்டி தாக்குதலுடன் தொடர்பா?

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரிடம் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. அந்தவகையில் சிட்னி, லிவர்பூல் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது குழுவொன்றை சேர்ந்த எழுவர் நியூ […]

செய்தி வாழ்வியல்

வீட்டுத் தோட்டம்: மன அழுத்தத்தைக் குறைக்கும் ‘இயற்கை தெரபி’ – புதிய ஆய்வில் தகவல்!

  • December 18, 2025
  • 0 Comments

இன்றைய இயந்திரமயமான உலகில், மனிதர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மன அழுத்தம் (Stress). இதைக் குறைக்க விலை உயர்ந்த சிகிச்சைகளை விட, நம் வீட்டில் ஒரு சிறிய பகுதியில் நாம் அமைக்கும் வீட்டுத் தோட்டம் (Home Garden) மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய (2025) மருத்துவ ஆய்வுகளின்படி, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தோட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களின் மனநிலை, மற்றவர்களை விட 6.6% அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மண்ணைத் […]

உலகம் செய்தி

வங்கதேச மாணவர் எழுச்சித் தலைவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்

  • December 18, 2025
  • 0 Comments

வங்காளதேசத்தில்(Bangladesh) 2024ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் தலைமையிலான எழுச்சியின் தலைவரான ஷெரிப் ஒஸ்மான் பின் ஹாடி(Sharif Osman bin Hadi), ஒரு கொலை முயற்சியில் காயமடைந்து சிங்கப்பூரில்(Singapore) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் ஹாடி உயிரிழந்துவிட்டார்” என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்காளதேச நாளிதழான டாக்கா ட்ரிப்யூனின்(Dhaka Tribune) அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் தேசியத் தேர்தலில் வேட்பாளராகக் கருதப்பட்ட ஹாடி, […]