இலங்கை

புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கை சுற்றுலாத்துறை இந்த ஆண்டில் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 93,031 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்  (SLTDA)  குறிப்பிட்டுள்ளது. இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2,196,624 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து குறிப்பிடத்தக்க சுற்றுலாப் பயணிகள்  […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டியின் (Rachida Dati) வீட்டில் சோதனை!

  • December 19, 2025
  • 0 Comments

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி (Rachida Dati) ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். தேசிய நிதி வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 க்கு இடையில்  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரச்சிடா டாட்டி எரிசக்தி குழுவான GDF சூயஸிடமிருந்து €300,000 இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என […]

TikTok USDS Joint Venture deal between ByteDance and Oracle to lift US ban. அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

டிக்டாக் (TikTok )அமெரிக்கத் தடைக்கு முற்றுப்புள்ளி: புதிய கூட்டு நிறுவனம் உதயம்!

  • December 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் டிக்டாக்கைத் தொடர்ந்து இயக்குவதற்காக, அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைவதற்கான. ஒப்பந்தங்களில் (Binding Agreements) கையெழுத்திட்டுள்ளதாக டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஷௌ ஜி செவ் (Shou Zi Chew) வியாழக்கிழமை (டிசம்பர் 18, 2025) தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளைக் கவனிக்க “TikTok USDS Joint Venture LLC” என்ற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் இதன் பங்குதாரர்கள் யார் யார் என்று அறிவித்துள்ளனர். ஆரக்கிள் (Oracle), சில்வர் […]

இலங்கை செய்தி

2026இல் 05 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் இலங்கை!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5% க்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டிற்கு இணையாகவும், அடுத்த ஆண்டில் IMF கணிப்புகளை கணிசமாக விஞ்சும் என்றும் மூத்த அமைச்சர் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தியிடம் குறிபிட்டுள்ளார். டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மறுசீரமைப்பு வளர்ச்சியினால் இந்த வேகம் உந்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிட்வா சூறாவளியினால்  22 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும், நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்கவும் 07 பில்லியன் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

  • December 19, 2025
  • 0 Comments

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பமானது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வந்தே […]

இலங்கை செய்தி

257,000 குடும்பங்களுக்கு 25,000 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது

  • December 19, 2025
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25,000 ரூபா மானியம்,பாதிக்கப்பட்டுள்ள 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இன்று (19.)இதனைத் தெரிவித்தார். மொத்த ஒதுக்கீட்டான 17.6 பில்லியன் ரூபாவில் இதுவரை 6.4 பில்லியன் ரூபா செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புயலால் 610,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 493,000 குடும்பங்கள் 25,000 ரூபா முதற்கட்ட மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். மேலும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு €90 பில்லியன் நிதியுதவியை வழங்க ஒப்புதல்!

  • December 19, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுக்கு €90 பில்லியன் (£78.8 பில்லியன்) நிதி உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்று ஒன்றுக்கூடியிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உக்ரைனின் இராணுவ மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வட்டியில்லாத கடனாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. உதவி தொகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றிக் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய உள்துறை அமைச்சகம் மீது இணைய தாக்குதல்: விசா தகவல்கள் திருடப்பட்டதா?

  • December 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விசா விவரங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant) இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறியுள்ளார். சீனாவுடன் தொடர்புடைய ஒரு குழு இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் தொடர்புடைய குழுவை கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனி நபர்கள் மிகக் குறைவாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில் வேண்டும்: அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது! சஜித் அணி நேசக்கரம்!!

  • December 19, 2025
  • 0 Comments

“ ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். அவர் பதவி விலக வேண்டியதில்லை. அவருடன் இணைந்து பயணிக்கவே நாம் விரும்புகின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர். அவர் பதவி […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி துறக்க மாட்டேன்: கட்சி மறுசீரமைக்கப்படும்! ஜீவன் அறிவிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் நோக்கம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். அவரால் இன்று (19) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமான் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன. காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் இதொகாவின் […]