புடினின் இல்லத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி
ரஷ்ய அரசாங்க தளங்களை உக்ரைன் இலக்குவைத்ததாக மாஸ்கோவின் கூற்றுகளை “வேண்டுமென்றே செய்த கவனச்சிதறல்” என்றும் சமாதான முன்னெடுப்புகளைத் தடம் புரளச் செய்யும் முயற்சி என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனியார் வீட்டில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில் “உக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களை கண்மூடித்தனமாக குறிவைத்த ஆக்கிரமிப்பாளரின் ஆதாரமற்ற கூற்றுகளை யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என காஜா கல்லாஸ் […]













