அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பொலிஸ் அராஜகமா? சபையில் சிறிதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்!

  • January 6, 2026
  • 0 Comments

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் Ramalingam Chandrasekhar , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் S. Siridharan இடையில் சபையில் Parliament இன்று சொற்போர் மூண்டது. நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுவதாக சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதை அதற்கு உதாரணம் காட்டினார். அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் NPP அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார். இதற்கு தனது உரையின்போது அமைச்சர் சந்திரசேகர் பதிலடி கொடுத்தார். “ வடக்கில் […]

ஐரோப்பா

உறைபனி நிலை – பிரான்ஸில் 05 பேர் உயிரிழப்பு!

  • January 6, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் சில பகுதிகளை இன்று உறைபனி தாக்கியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் பனியில் சிக்கி 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சின் லேண்டஸ் (Landes) பகுதியில் 03 பேரும்,  பாரிஸைச் சுற்றியுள்ள இல்-டி-பிரான்ஸ் (Île-de-France)  பகுதியில் குறைந்தது இரண்டு பேரும்  உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடுமையான பனிப்பொழிவால் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கில் ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்புடைய செய்தி உறைபனி எச்சரிக்கை: பிரித்தானியாவில் இன்று 1,000 […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி முக்கிய செய்திகள்

கழுகுப் பார்வையில் கிரீன்லாந்து : வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ட்ரம்பின் அடுத்த இலக்காக கிரீன்லாந்து மாறியுள்ளது. நேட்டோ மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து தேவை என்று ட்ரம்ப் கூறிவருகிறார். அதனை விட்டு தராவிட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் அவர் மறுக்கவில்லை. ஆகவே அமெரிக்காவின் அடுத்த இலக்கு கிரீன்லாந்துதான் என்பது தெளிவாக தெரிகிறது. இதில் ட்ரம்பிற்கு பலம் சேர்க்கும் புதிய விடயம் என்னவென்றால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தாலும் தட்டிக் கேட்கக்கூடிய அளவிற்கு வேறு எந்த நாடுகளுக்கும் பலம்பொருந்தியதாக  இல்லை […]

உலகம் செய்தி

தெற்கு சிரியாவில் இஸ்ரேல் ஊடுருவல் – இறையாண்மையை மீறுவதாக சிரியா கண்டனம்

  • January 6, 2026
  • 0 Comments

தெற்கு சிரியாவின் குனைட்ரா (Quneitra) மாகாண கிராமப்புறத்தில் அமைந்துள்ள சைதா அல்-கோலன் ( Saida al-Golan) கிராமத்திற்குள் பன்னிரண்டு இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளதாக அல் ஜசீரா செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஊடுருவல், சிரியாவின் இறையாண்மையை மீறும் நடவடிக்கையாகும் என சிரிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்தியஸ்தத்தின் கீழ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிரிய பிரதிநிதிகள் குழு இஸ்ரேலிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக […]

இலங்கை செய்தி

மீனவர்களுக்கு எச்சரிக்கை – அடுத்த 24 மணித்தியாலங்களில் நடக்கப் போவது என்ன?

  • January 6, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை ஜனவரி 08ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிக்கும் […]

இலங்கை செய்தி

போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது – 500 மில்லியன் ரூபா பெறுமதி

  • January 6, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குஷ் ரக போதைப்பொருளின் நிறை 50 கிலோகிராம் […]

உலகம் செய்தி

சீனா, தென் கொரியா உச்சிமாநாடு – உறவுகளை மேம்படுத்தும் முயற்சி கைகூடுமா?

  • January 6, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் ஆகியோர் திங்கட்கிழமை இரண்டாவது முறையாக உச்சிமாநாட்டை நடத்தினர். அண்டைய நாடுகளில் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கிடையிலான சிக்கலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டின் ஒரு பகுதியாக, சி ஜின்பிங், லீ ஜே மியுங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக, லீ […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 2026 இல் முதல் பெயரிடப்பட்ட புயல் – கோரெட்டி

  • January 6, 2026
  • 0 Comments

பிரான்ஸ் வானிலை ஆய்வு சேவையால் பெயரிடப்பட்ட புயல் “கோரெட்டி” (Goretti), பிரித்தானியாவில் இந்த ஆண்டின் முதல் பெயரிடப்பட்ட புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலை நெருங்கி வருவது குறித்து பொதுமக்களுக்கு தெளிவான மற்றும் உத்தியோகப்பூர்வ தகவல்களை வழங்குவதே புயல்களுக்கு பெயரிடுவதன் முக்கிய நோக்கம் என அந்த வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. எளிதில் அடையாளம் காணக்கூடிய பெயர் பயன்படுத்தப்படுவதால், ஊடகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து தகவல்களை பகிர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அபாயங்களை புரிந்துகொண்டு, தகுந்த […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான தீர்வையும் வழங்குக!

  • January 6, 2026
  • 0 Comments

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் NPP முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் S. Siritharan வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள்மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர். வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த […]

உலகம் செய்தி

அமெரிக்கா–டென்மார்க் மோதல் தீவிரம்: நேட்டோவில் புதிய பதற்றம்

  • January 6, 2026
  • 0 Comments

நேட்டோ மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தைப் பாதுகாக்க கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller) தெரிவித்துள்ளார். சி.என்.என் (CNN) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் யாரும் போரிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் கவனம் இப்போது கிரீன்லாந்து பக்கம் […]