இலங்கை செய்தி

பொருளாதார மீட்சி குறித்து ஐரோப்பிய ஆணையாளருடன் பிரதமர் ஆராய்வு!

  • January 20, 2026
  • 0 Comments

சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவுடன் Jozef Síkela பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியவை வருமாறு, “ சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவைச் […]

ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்தில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த 06 வயது சிறுமி!

  • January 20, 2026
  • 0 Comments

ஸ்பெயின் ரயில் விபத்தில் சிக்கி ஏறக்குறைய 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 06 வயது சிறுமி ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்ரிட் (Madrid) நகரில் லயன் கிங் (Lion King) இசை நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்  இந்த விபத்தில் உயிரிழந்தனர். இதில் மேற்படி சிறுமியின் பெற்றோர், 12 வயதுடைய அண்ணன் மற்றும் உறவினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி தலையில் அடிப்பட்ட நிலையில் […]

அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (20) அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும். இது விடயத்தில் அரசாங்கம் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி வீதியில் நடப்பதால் பயனில்லை – வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவை கோரி யாழில் போராட்டம்

  • January 20, 2026
  • 0 Comments

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஆளுநரான நா. வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அக்கால பகுதியில் வீட்டு திட்டங்களை பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் […]

உலகம் செய்தி

சிரியாவில் பெரும் பதற்றம்- தப்பியோடிய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

  • January 20, 2026
  • 0 Comments

சிரியாவின் வடக்குப் பகுதியில், அரசு இராணுவத்துக்கும் குர்திஷ் தலைமையிலான போராளிகளுக்கும் இடையிலான மோதலின் போது, சிறையில் இருந்து தப்பிய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வாரங்களாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு, அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹசாக்கா நகரை நோக்கி அரசு படைகள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் தற்போது சிரிய […]

உலகம்

துணைப் பிரதமரை உடன் பதவிநீக்கம் செய்த வடகொரிய அதிபர்!

  • January 20, 2026
  • 0 Comments

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) பொருளாதாரக் கொள்கையை மேற்பார்வையிடும் உயர் அமைச்சரவை அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹம்கியோங்கில்  (Hamgyong) உள்ள தொழில்துறை வசதியான ரியோங்சாங் மெஷின் (Ryongsong Machine) வளாகத்திற்கு பயணம் செய்த அவர்,  ​​துணைப் பிரதமர் யாங் சுங் ஹோவை (Yang Sung Ho)  “அந்த இடத்திலேயே” பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. வடகொரியாவில் பொருளாதார மந்த நிலையை சீரமைக்க அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில், அதிகாரிகளின் திறமையின்மையால் […]

புகைப்பட தொகுப்பு

எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார்

  • January 20, 2026
  • 0 Comments

திரையுலகில் மிகவும் பிரபலமான தம்பதியர்களாக இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர்கள் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்துள்ளனர். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார். இதனால் எங்கள் […]

செய்தி பொழுதுபோக்கு

ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

  • January 20, 2026
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன் நடித்துள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படத்தை ஜனவரி 9-ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சபை இறுதி நேரத்தில் சான்றிதழ் வழங்க மறுத்ததால் இந்தச் சட்டச் சிக்கல் உருவானது. தணிக்கை சபையின் ஆய்வுக்குழு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மர்மமான […]

ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்து – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்கள்!! மீட்கமுடியாமல் தவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் காணாமல்போனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பெட்டிகளை அணுக கிரேன்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் குறைந்தது மூன்று உடல்கள் இன்னும் சிக்கியிருப்பதாக உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா (Fernando Grande-Marlaska) குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி  ஸ்பெயின் ரயில் விபத்து – அதிகரிக்கும் மரணங்கள்!

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் பயணத்தைத் தவிர்க்குமாறு பெய்ஜிங் எச்சரிக்கை

  • January 20, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷார்-இ-நவ் (Shahr-e-Naw) பகுதியில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற  இத்தாக்குதலில் 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சீனாவில் உய்குர் (Uyghur) முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்த சீன நாட்டவர் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் […]