ஐரோப்பா செய்தி

கிரீஸில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு

  • April 13, 2023
  • 0 Comments

கிரீஸில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது என்று பிபிசியிடம் மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் பணிபுரியும் பத்து மரண விசாரணை அதிகாரிகளில் ஒருவரான Eleni Zaggelidou, 57 சிதைந்த உடல்களில் இருந்து DNA மாதிரிகள் எடுக்கப்பட்டதாக கூறினார். இதற்கிடையில், 2000களில் கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியின் போது சிக்கன நடவடிக்கைகள் ரயில்வேயில் முதலீடு இல்லாததற்கு பங்களித்ததாக அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறினார். பேரிடரைத் தொடர்ந்து, அரசு புறக்கணிப்பைக் கண்டித்து […]

ஐரோப்பா செய்தி

தனது ஐந்து பிள்ளைகளை கொன்ற பெல்ஜிய தாய் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கருணைக்கொலை

  • April 13, 2023
  • 0 Comments

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வழக்கில் தனது ஐந்து குழந்தைகளைக் கொன்ற பெல்ஜியப் பெண், அவர்கள் கொல்லப்பட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொந்த வேண்டுகோளின் பேரில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை இதனை தெரிவித்தார். பிப்ரவரி 28, 2007 அன்று நிவெல்லெஸ் நகரில் உள்ள குடும்ப வீட்டில் ஜெனிவிவ் லெர்மிட் தனது மகன் மற்றும் மூன்று முதல் 14 வயதுடைய நான்கு மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்தார். பின்னர் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார், […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும் குளிர்காலம்

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் மலர்கள் மலர்கின்றன, சூரியன் பிரகாசிக்கிறது – எனவே வசந்த காலம் வந்துவிட்டது என்று நினைத்ததற்காக நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். ஏனெனில் பிரித்தானியாவில் குளிர்காலம் மீண்டும் மீண்டும் வருகிறது, வானிலை அலுவலகம் அடுத்த வாரம் பனிப்பொழிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வார இறுதியில் முழு இங்கிலாந்தில் குளிர்ச்சியான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படும். இங்கிலாந்து முழுவதும் 2-ம் நிலை குளிர் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் சித்ரவதை முகாம்கள்;அடித்து, மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய ரஷ்யா

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்து உள்ளது. அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷ்யா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் […]

ஐரோப்பா செய்தி

காதலி, குழந்தைகளுடன் ஆடம்பர பண்ணை வீட்டில் வசிக்கும் புதின்..! வெளிவந்துள்ள தகவல்

  • April 13, 2023
  • 0 Comments

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. போர் ஏற்பட மேற்கத்திய நாடுகளே காரணம், நாங்கள் அல்ல என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இந்நிலையில், அதிபர் புதின் தனது ரகசிய காதலி அலினா கபேவா மற்றும் தங்களது குழந்தைகளுடன் ஆடம்பர பண்ணையில் வசித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா (39) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ரஷ்ய […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீனாவிடம் வலியுறுத்தும் ஜேர்மனி!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீனாவிடம் வலியுறுத்தும் ஜேர்மனி! ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை தவிர்க்குமாறு ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக உக்ரேனில் இருந்து ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக நாடு தற்காத்துக் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 1.2 பில்லியன் பவுண்ட் பேட்டரி சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் Masdar நிறுவனம்!

  • April 13, 2023
  • 0 Comments

எமிரேட்ஸின்  Masdar  நிறுவனம் பிரித்தானியாவில் பேட்டரி சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச எரிசக்தி வாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த   Masdar  நிறுவனத்தின் சி.ஈ.ஓவான முகமது ஜமீல் அல் ரமாஹி இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறித்த திட்டம் 1.2 பில்லியன் பவுண்டுகள் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இங்கிலாந்தில் ஏற்கனவே 4 பில்லியன் பவுண்டுகளை சுத்தமான எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். அபுதாபி ஃபியூச்சர் எனர்ஜி நிறுவனமான   Masdar  அபுதாபி நேஷனல் ஆயில் […]

ஐரோப்பா செய்தி

கிரீஸ் ரயில் விபத்து : அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது என தொழிற்சஙகம் முழக்கம்!

  • April 13, 2023
  • 0 Comments

கிரீஸ் ரயில் விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிரேக்க ரயில்வே ஊழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிரீஸின் ரயில்வே ஊழியர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர பணிபகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக நிரந்தர பணியாளர்களை சேர்ப்பது, சிறந்த பயிற்சி மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான எங்கள் நிலையான கோரிக்கைகள் நிரந்தரமாக குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனிய குழு : மக்களை அச்சுறுத்தியதாக தகவல்!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனிய உளவுக் குழுவொன்று பிரையன்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனிய உளவுக் குழுவானது சுஷானி கிராமத்தில் நுழைந்ததாகவும், அங்கிருந்த மக்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் கொண்ட குறித்த குழுவினர், வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்ப்டுள்ளது. சுஷானி நகரில் ஒரு மின் துணை நிலையம், எரிவாயு நிலையமும் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படடுள்ளது. அதேநேரம் லியுபெச்சன் கிராமத்தில் பணயக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

24 மணி நேரத்தில் 170 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

  • April 13, 2023
  • 0 Comments

பக்முட் நகரில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய படையினர் கடந்த 24 மணி நேரத்தில் 170 ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களில் 14 ரொக்கட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அமைச்சம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு போர் ட்ரோன்கள், மற்றும் 58 சால்வோ ரொக்கெட் தாக்குதல்கள் உட்பட 21 வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் […]