பிரித்தானியாவில் 1.2 பில்லியன் பவுண்ட் பேட்டரி சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் Masdar நிறுவனம்!
எமிரேட்ஸின் Masdar நிறுவனம் பிரித்தானியாவில் பேட்டரி சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச எரிசக்தி வாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த Masdar நிறுவனத்தின் சி.ஈ.ஓவான முகமது ஜமீல் அல் ரமாஹி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குறித்த திட்டம் 1.2 பில்லியன் பவுண்டுகள் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
இங்கிலாந்தில் ஏற்கனவே 4 பில்லியன் பவுண்டுகளை சுத்தமான எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அபுதாபி ஃபியூச்சர் எனர்ஜி நிறுவனமான Masdar அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி , முபதாலா இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி மற்றும் அபுதாபி நேஷனல் எனர்ஜி கம்பெனி ஆகிய மூன்று முன்னணி பங்குதாரர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.