செய்தி தமிழ்நாடு

நாம் தமிழர் செயலாளர் மீது வழக்கு

  • April 27, 2023
  • 0 Comments

பொதுக் கூட்டத்தில் தேச நல்லிணக்கத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உரையாற்றினார். இந்நிலையில் அவர் தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாகவும் இரண்டு பிரிவுகளின்(153(A)(I)(a), 505(ii)) […]

உலகம்

அமெரிக்க டொலரை மிஞ்சிய யுவான்!

  • April 27, 2023
  • 0 Comments

சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்கு யுவான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் நாணயமாக பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் பதிவான அதிகாரத்துவத் தரவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்னர் அத்தகைய கட்டணங்களுக்கு அமெரிக்க டாலர் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் மார்ச்சில் 549.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான யுவான் நாணயம் சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய மாதம் (பிப்ரவரி) சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்கான யுவான் பயன்பாட்டின் மதிப்பு 434.5 பில்லியன் டொலராக இருந்தது. கடந்த […]

செய்தி தமிழ்நாடு

உயர்ரக போதை பொருட்கள் விற்பனை ஒருவர் கைது

  • April 27, 2023
  • 0 Comments

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான வெள்ளகிணர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை […]

செய்தி தமிழ்நாடு

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரிக்கை

  • April 27, 2023
  • 0 Comments

சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கொடியை ஏற்றி வைத்து, காந்தி படத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திறந்து வைத்தனர்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் பேசுகையில்,வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான முறையில் வணிகம் செய்வதற்கு தேவையான […]

செய்தி தமிழ்நாடு

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

  • April 27, 2023
  • 0 Comments

கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை உட்கொண்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு […]

செய்தி தமிழ்நாடு

சித்திரை திருவிழாவில் 4 கோவில்களுக்கு ரோப்கார் அமைப்பு

  • April 27, 2023
  • 0 Comments

உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி மதுரை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் ஆழ்வார்புரம் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், தளபதி, வெங்கடேசன், எம்.பி.சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு விழாவின் போது முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் […]

வாழ்வியல்

குறட்டையைக் குறைக்க இலகுவான வழிமுறைகள்

  • April 27, 2023
  • 0 Comments

தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. சுவாசத்தில் ஏற்படும் இந்த இடையூறு காரணமாக தொண்டையில் உள்ள திசுக்கள் அதிர்ந்து குறட்டை ஒலி எழுப்புகிறது. குறட்டையால் அருகில் உறங்குவோருக்கு தூக்கம் கெடுகிறது. குறட்டை ஏற்பட உடற்பருமன், வாய்/நாசி/தொண்டை கோளாறு, தூக்கமின்மை ஆகியவை காரணமாக இருக்கலாம். தூங்கும் முன் மது அருந்தினால் கூட குறட்டை ஏற்படலாம். சத்தமான குறட்டை, அடிக்கடி குறட்டை, தூங்கும் போது மூச்சுத்திணறல், காலை எழுந்தவுடன் தலைவலி, வறண்ட […]

செய்தி தமிழ்நாடு

13 சவரன் நகை திருட்டு பெண் கைது

  • April 27, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாக்களின் போது பழனியத்தாள்(75), சிவபாக்கியம்(65) மற்றும் துளசியம்மாள்(75) ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்றார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை […]

செய்தி தமிழ்நாடு

சேலத்து மாம்பழங்களை கொண்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி

  • April 27, 2023
  • 0 Comments

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் செல்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து டெல்லியில் முக்கிய அரசியல் கட்சி […]

அறிந்திருக்க வேண்டியவை

வேலையை விடுவதற்கான நேரத்தை காட்டும் அறிகுறிகள்

  • April 27, 2023
  • 0 Comments

வேலையை விடுவது என்பது எப்போதும் எளிதான ஒரு முடிவாக இருப்பதில்லை. ஆனால், நீங்கள் வேறு வேலையைப் பார்க்கத் தொடங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் சில தெளிவான அறிகுறிகள் உள்ளன. விளக்குகிறார் அகிலா ரங்கண்ணா நீங்கள் வளர்ச்சியடையவில்லையா? “என்னுடைய கடந்த வேலையில் நான் ஏழு ஆண்டுகளாக வேலை செய்து வந்தேன்,” என்கிறார் மேக்னா பதக், என்கிற டெக்கி “மேலும் கடந்த நான்கு வருடங்களில் எதுவுமே மாறவில்லை, அதே பொறுப்புகள், அதே வேலைகள் என்று முற்றிலும் தேங்கிப்போய்விட்டேன். வேலையை விடும் […]