அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வீடொன்றில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை சுட்டுக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டு வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 5 பேரும் ஹொண்டுராஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இது அமெரிக்காவை உலுக்கியிருக்கும் ஆகப்புதிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். கொல்லப்பட்டவர்களில் 8 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார். சம்பவத்தின்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆடவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் AR 15 ரக […]













