சூடானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற மறுப்பு
சூடான் குடியரசில் தற்போது தங்கியுள்ள 18 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதை நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், குறித்த 18 நபர்கள் சூடானில் தங்கியிருக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் வெளியேறினால் வேலை இழக்க நேரிடும் என்றும் கூறினார். வடகிழக்கு ஆபிரிக்க தேசத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதுவரை சூடானில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 34 இலங்கையர்களை வெளியேற்ற அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. […]













