யாழில் சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இரும்பு திருடிய இருவர் கைது
யாழ் காங்கேசன்துறை துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இரும்பு திருடிய இருவர் காங்கேசன்துறை பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ இரும்பை மீட்டுள்ளதாகவும், கைதானவர்களில் ஒருவர் சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நல்லிணக்க புரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். […]













