இலங்கை செய்தி

வரலாற்றில் முதன்முறையாக இலங்கை போக்குவரத்து சபையில் பெண் நடத்துநர்கள்

  • February 6, 2026
  • 0 Comments

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (6) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, புதிதாக நியமிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

  • February 6, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் […]

இலங்கை செய்தி

மாகாண சபை தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

  • February 6, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்  உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில்  தீர்வொன்றை காண்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை கடந்த 2026 ஜனவரி 06 ஆம் திகதி இந்த பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 06 ஆம் திகதி முதல் எதிர்க்கட்சி தனது பிரதிநிதிகளாக ரஞ்சித் […]

இலங்கை செய்தி

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A009) மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • February 6, 2026
  • 0 Comments

கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி-யாழ்ப்பாணம் வீதியில் (A009) மஹையாவ சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள், இன்றிலிருந்து 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைத் திட்டத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் சுமூகமாக உரையாடினார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் […]

உலகம்

கிரீன்லாந்தில் தனது முதல் புறக்காவல் நிலையத்தை திறக்கும் கனடா!

  • February 6, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கனடா தனது முதல் இராஜதந்திர புறக்காவல் நிலையத்தை கிரீன்லாந்தில் திறக்க உள்ளது. கனடாவின் மூத்த அதிகாரிகள் குழு, கவர்னர் ஜெனரல் மேரி சைமன்  (Mary Simon) மற்றும் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் இன்று கனடாவின் துணைத் தூதரகத்தை முறையாகத் திறப்பதற்காக நூக்கிற்கு (Nuuk) பயணம் செய்துள்ளனர்.  அவர்களுடன் கனடாவின் கடலோர காவல்படை  செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விஜயத்திற்கு […]

இந்தியா

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து – 18 தொழிலாளர்கள் பலி!

  • February 6, 2026
  • 0 Comments

இந்திய மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்புக்குப் பிறகு சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத சுரங்கம் மாநில தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த சுரங்கத்தை இயக்கியவர்களை இந்திய காவல்துறை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் மீது வழக்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் மூடல்!

  • February 6, 2026
  • 0 Comments

கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான நிலைய செய்தி தொடர்பாளர், விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் தரையிறங்கும் பணிகளை மீளவும் எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாது என அறிவித்துள்ளார். நேற்றில் இருந்து கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடுமையான பனிப்பொழிவால் ரயில் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு : எதிரணி போர்க்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை Emergency Law மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார். அவசரகாலச் சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, அச்சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தலுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது – பரிசீலனையில் உள்ள சட்டம்!

  • February 6, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 60,000 சட்டவிரோத குடியேறிகள் மற்றும் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை  அலுவலகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய 19 மாதங்களுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும், கூடுதலாக 43,000 பேர் தாமாக முன்வந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டவிரோத குடியேறிகள் ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டை (ECHR) பயன்படுத்தி நாடு கடத்தலுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் நடவடிக்கையை தடுக்க புதிய சட்டத்தை கொண்டுவரவும் இங்கிலாந்து அரசாங்கம் கவனம் […]

விளையாட்டு

ICC T-20 உலகக்கிண்ண தொடர் நாளை ஆரம்பம்: முதல் நாளில் 3 ஆட்டங்கள்!

  • February 6, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண போட்டி தொடர் நாளை (07) கோலாகலமாக ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயெ போட்டிகள் இடம்பெறவுள்ளன. 20 அணிகள் பங்கேற்றுள்ள தொடரின் முதல் நாளிலேயே ரசிகர்களை கவரும் வகையில் மூன்று முக்கியப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் ஒரு போட்டியும், இந்தியாவில் இரு போட்டிகளும் இடம்பெறவுள்ளன. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு எஸ்.எஸ்.சி. SSC […]