இலங்கை

அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

  • August 4, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 4 போத்தல் குடிநீரால் பறிபோன தாயாரின் உயிர்!

  • August 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில்கடும் வெப்பம் காரணமாக 20 நிமிடங்களில் 4 போத்தல் தண்ணீர் குடித்த தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இண்டியானா மாகாணத்தை சேர்ந்த 35 வயது ஆஷ்லே சம்மர்ஸ் என்பவரே கடுமையான வெப்பம் காரணமாக 64 அவுன்ஸ் குடிநீரை சுமார் 20 நிமிடங்களில் குடித்து தீர்த்துள்ளார்.கடந்த மாதம் ஆஷ்லே சம்மர்ஸ் குடும்பம் Freeman ஏரி பகுதியில் 4ம் திகதி விடுமுறையை கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளது. இந்த நிலையில், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார் […]

பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகும் இயக்குநர்களின் மீட் அப் புகைப்படம்

  • August 4, 2023
  • 0 Comments

கோலிவுட் இயக்குநர்களின் மீட் அப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இயக்குநர்கள், மணிரத்தினம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, கௌதம்மேனன்,லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சசி ஆகியோர் உள்ளனர். இந்த சந்திப்பு இயக்குநர் மணிரத்தினம் வீட்டில் நடந்துள்ளது. புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த ஷங்கர் “இந்த ஸ்பெஷலான தருணத்திற்கு நன்றி மணி சார். நினைவுகளை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி கார்த்திக் பாடிய இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரகுமான் பாடல்களுக்கு வைப் செய்ததில் மகிழ்ச்சி. இதுதான் […]

இலங்கை

யாழில் அதிகளவு ஹெரோயினை நுகர்ந்த குருநாகல் இளைஞன் மரணம்!

  • August 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம் உபகரணங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார். பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞன் உயிரிழந்துள்ளான். ஹெரோயினை பாவித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிக ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ […]

மத்திய கிழக்கு

WhatsApp-ல் இதயம் அனுப்பினால் சிறைதான்… அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ள சவூதி அரேபியா!

  • August 4, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் அனைத்து பயனர்களும் ‘இதயம்’ ஈமோஜியைப் பொதுவாக பயன்படுத்திக்கொண்டு தான் இருகின்றார்கள்.ஆனால் தற்போது ​​குவைத்தில், இந்தச் செயல் சவூதி அரேபியாவில் இருந்ததைப் போலவே குற்றமாக கருதப்படும் என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. குவைத்தில், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக வலைப்பின்னல் தளத்திலும் ஒரு பெண்ணுக்கு ‘இதயம்’ எமோஜியை அனுப்புவது அநாகரீகமான செயலாகக் கருதப்படுகிறது, இது சட்டத்தால் தண்டிக்கப்படும் என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் குற்றவாளிகள் என […]

வட அமெரிக்கா

மாக்டாலன் தீவுகளில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல் பாகங்கள் கண்டுப்பிடிப்பு!

  • August 4, 2023
  • 0 Comments

கனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல்களின் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.கியூபெக் மாகாணத்தின் மாக்டாலன் தீவுகளில் இந்த கப்பல் இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 18ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பல்களின் பாகங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.ஆய்வாளர் ஜேன் சிமோன் ரிச்சர்ட் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த கப்பல் பாகங்கள் இதுவரையில் எவரினாலும் கண்டு பிடிக்கப்படாதவை என ஆய்வாளர் ஜேன் சிமோன் தெரிவிக்கின்றார்.ஒரு கப்பலின் பாகத்தை கண்டு பிடிப்பதே மிகவும் அரிய […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் – ஒரே போடாய் போட்டார் அனிருத்

  • August 4, 2023
  • 0 Comments

ஜெயிலர் படத்தை பார்த்த அனிருத் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படங்கள் படுதோல்வியை சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை. இதனால் உடனடியாக ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சிக்கலாகிவிடும் என யோசித்தார் ரஜினிகாந்த். எதிர்பார்த்தபடியே ரஜினியை வைத்து சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் நெல்சன். கண்டிப்பாக இந்தப் படம் மெகா […]

இலங்கை

நீர் கட்டணத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை!

  • August 4, 2023
  • 0 Comments

அடுத்த சில மாதங்களில் நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கையும் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதுடன், அடுத்த திருத்தத்தில் நீர்க் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் ரஷ்யாவின் லூனா-25 தானியங்கி நிலையம்

  • August 4, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. லூனா-24 என்பது சோவியத் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற […]

இலங்கை

எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

  • August 4, 2023
  • 0 Comments

சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக உலக சந்தையில் எரிவாயுவின் விலை 85 டொலாராக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய விலைதிருத்தம் செய்யப்படும் எனவும் புதிய விலை திருத்தம் இன்று (04.08) அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.