பிரான்ஸில் குளியல் தொட்டியில் 7 வயது சிறுவனின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸார்
பிரான்ஸில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவனது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை மாலை மாலை 6.25 மணி அளவில் நகரில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. அங்குள்ள இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இத்தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது. தனது மகனை நல்லடக்கம் செய்யவேண்டும் என தெரிவித்த சிறுவனின் தந்தை, முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, […]













