இலங்கை

திருகோணமலையில் கடைக்கு சென்று கொண்டிருந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 21, 2023
  • 0 Comments

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்றிரவு (20) உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69வயது) எனவும் தெரியவருகிறது. வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் […]

ஆசியா

சீனாவை உலுக்கிய சூறாவளி.. ஒரே நாளில் 10 பேர் பலி

  • September 21, 2023
  • 0 Comments

சீனாவில் பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மேலும், சுகியன் நகரின் சில பகுதிகளில் […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • September 21, 2023
  • 0 Comments

40 வயதை கடந்தும் தரைத்துறையில் மின்னும் நடிகை திரிஷா கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது. இவருக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டது. விரைவில் த்ரிஷா வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். மேலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மத்த நடிகைகளுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு இவர் […]

கருத்து & பகுப்பாய்வு

ரணில் மீண்டும் ஜனாதிபதி ஆவாரா?

  • September 21, 2023
  • 0 Comments

முதலில் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கே திட்டமஜடப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி அடுத்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றை கலைக்கவேண்டிய சூழ் நிலையும் அவசியமும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருப்பதாகவும் எனவே பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்த ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படலாமென எதிர்வு கூறப்படுகிறது. 2020 ஆம் […]

வட அமெரிக்கா

நியூயார்க்கில் வலி நிவாரணியை உட்கொண்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • September 21, 2023
  • 0 Comments

நியூயார்க் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வலி நிவாரணியை உட்கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள சிறுவர் பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து Fentanyl எனப்படுகின்ற 1 கி​லோகிராம் வலி நிவாரணி வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. ஃபெண்டானில் (Fentanyl) எனப்படும் குறித்த வலி நிவாரணி புற்றுநோயாளிகள் மற்றும் வலிமிகுந்த அறுவை சிகிச்சை நடவடிக்கைகளில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை சக்திவாய்ந்த செயற்கை பைபெரிடைன் ஓபியாய்டு (synthetic piperidine opioid ) மருந்து ஆகும், […]

இலங்கை

இலங்கையில் உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • September 21, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வியல்

எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • September 21, 2023
  • 0 Comments

ஒவ்வொரு மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்று. உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் தோற்றத்தை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதயநோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பலவகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இது […]

உலகம் முக்கிய செய்திகள்

இந்தியாவை அடுத்து மேலும் சில நாடுகளில் பரவிய நிபா வைரஸ்

  • September 21, 2023
  • 0 Comments

இந்தியாவில் தொடங்கிய நிபா வைரஸ், தற்போது பங்களாதேஷ், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிபா என்பது வௌவால்கள் மற்றும் பன்றிகளிடமிருந்து மனிதர்களை பாதித்து பின்னர் மனிதர்களிடையே பரவும் வைரஸ் ஆகும். அதிக காய்ச்சல், வாந்தி, சுவாச தொற்று போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தால் அது மூளை வீக்கமாக உருவாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நிபா வைரஸ் முதன்முதலில் மலேசியாவில் 1999 ஆம் ஆண்டு பன்றி […]

ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் அமுலாகும் அதிரடி நடவடிக்கை

  • September 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இனி கடவுசீட்டு தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுசீட்டை அணுகல் இல்லாமல், பயோமெட்ரிக் என்னும் அங்க அடையாள முறையை பயன்படுத்தி தானியங்கு குடிநுழைவு அனுமதியைப் பெறலாம். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு 2024ஆம் ஆண்டு முதல் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்காக நடப்புக்கு கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் குடிநுழைவு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எண்ட்-டு-எண்ட் […]

ஐரோப்பா

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளால் கடத்திச் செல்லப்பட்ட 19,000 சிறுவர்கள்

  • September 21, 2023
  • 0 Comments

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் சிறுவர்களை மீட்டு வர உதவுமாறு கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு இது தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய ஒலெனா ஜெலன்ஸ்கா, உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சிநுவர்களும், பெற்றோரும், உக்ரைன் அரசும் அவர்களை தலைமூழ்கிவிட்டதாக கூறி தாய் நாட்டிற்கு எதிராக அவர்களை ரஷ்ய அதிகாரிகள் மூளை சலவை செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.