யாழில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை!
யாழில் பழுதான மற்றும் காலவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக 06 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த 06 பேருக்கு எதிராகவும் நீதிமன்றம் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்ப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள குளிர்பான உற்பத்தி நிலையம் ஒன்றில் காலாவதியான ஜுஸ் பக்கட்டுகள் […]













