கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்ட தேரர்
லிஹினிகிரிய, பொத்துஹெர பொத்குல் விகாரையில் வசித்து வந்த பவிலிகமுவைச் சேர்ந்த சுஜாத தேரர் நேற்று (29) இரவு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொத்துஹெர பரபாவில பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான தனியார் வீடொன்றில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேரர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியியலாளர் என தெரிவிக்கப்படுகிறது. 64 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட தேரர் திருமணமானவர் எனவும் அவரது மனைவி […]













