சுற்றாடல் அமைச்சு ரணிலின் வசம்!
சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் பூச்செடிகளில் ஏறத்தாழப் பாதி, அழிந்துபோகும் அபாயத்தில் லண்டனின் கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுமுதல் 18,800க்கும் மேற்பட்ட புதிய வகைத் தாவரங்களுக்கும் காளான்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிலத் தாவரங்களின் அனைத்துலகத் தரவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 350,000 தாவர இனங்கள் உள்ளன. கியூ தோட்டம், விதைகளைச் சேமித்துவைப்பது, எஞ்சியுள்ள அதன் தாவர, காளான் மாதிரிகளைப் பராமரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பல உயிரினங்களைப் பாதுகாக்க முற்படுகிறது. ஆசியா, […]
12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அதிகாரிகளிடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் புதிய பத்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பொருளாதாரம் ஏதேனும் நெருக்கடியை எதிர்கொண்டால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இந்த புதிய பத்திரம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை தொடர்ந்து 7வது வாரமாக 02 டொலர்களை தாண்டி செல்வதை காணமுடிகிறது. இந்த நிலை கிறிஸ்மஸ் சீசன் முடியும் […]
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், பயங்கரவாதிகளுக்கு X இல் இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளை X நீக்கியுள்ளது. “X பொது உரையாடலுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, குறிப்பாக இது போன்ற முக்கியமான தருணங்களில், தளத்தின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கத்தையும் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் Google நிறுவனம் பாஸ்வேர்ட் இல்லாமல் லாகின் செய்யும் Passkey என்ற முறையை கொண்டு வந்தது. தற்போது ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பாஸ்வேர்டுக்கு பதிலாக Passkey மட்டும் பயன்படுத்துமாறு google வலியுறுத்தியுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட கணக்குக்கு பயனர்கள் விருப்பப்பட்டால் பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் Passkey பயன்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் பயணர்களின் கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும் என பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதுகின்றன. இப்போது எல்லா பயனர்களும் பாஸ்கீ பயன்படுத்தி இயல்பாக லாகின் […]
பிலிப்பைன்ஸ் தலைநகரில் இன்று (13.10) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. மணிலாவில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) தெற்கே ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகள் சேதம் மற்றும் பின் அதிர்வுகளை எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் உணவு மற்றும் மருந்துகளை அனுமதிக்க காசாவில் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா பகுதியில் “கண்மூடித்தனமான” குண்டுவெடிப்பால் பல பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல்-ஷேக்குடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அறிக்கையை வெளியிட்டார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது, தொழிற்சாலைகளில் கட்டப்பட்ட கிட்டதட்ட 1,000 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தரத்தை உயர்த்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கை இடைக்காலத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும். 2040 ஆம் ஆண்டுக்குள், தங்கும் விடுதிகளில் புதிய தரங்கள் நிறைவேற்றி […]
இலங்கையின் பலப்பகுதிகளில் இன்றும் (13.10) மழையுடனான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவுக்கு பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுகுதிகளிலும், காலை வேளையில் லேசான மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய […]