இலங்கை

லெபனானில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல்!

  • October 17, 2023
  • 0 Comments

லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 05 பேர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் இலங்கை பெண் ஒருவரும் உள்ளடங்குவுதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

திருகோணமலையில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை: இம்ரான் எம்.பி

தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவான் அத்துக்கோரள ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் […]

இலங்கை

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

  • October 17, 2023
  • 0 Comments

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தொலைப்பேசி இலக்கங்களை உடன் வழங்குமாறு பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக தெற்கு லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வழங்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 070386754, 071960810 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பா

சுவீடன் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

  • October 17, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தின் தலைநகரில் இரண்டு ஸ்வீடன் பிரஜைகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, வெளிநாட்டில் உள்ள நோர்டிக் நாட்டின் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்வீடன் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. “வெளிநாட்டில் ஸ்வீடன் மற்றும் ஸ்வீடன் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை  பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடன் பிரஜைகள் கொல்லப்பட்டதால், வெளிநாட்டில் உள்ள ஸ்வீடன் பிரஜைகளுக்கு அதிகரித்த எச்சரிக்கையையும் அதிகரித்த விழிப்பையும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை செய்ய 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கத்தின் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் […]

ஐரோப்பா

பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை மூடப்பட்டது!

  • October 17, 2023
  • 0 Comments

பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்களை இன்று (17.10) வெளியேற்றியுள்ளது. அதேநேரம் குறித்த அரண்மனை மூடப்படும் என சமூகவலைத்தளமான  X இல் Chateau de Versailles தெரிவித்துள்ளது. சமீப நாட்களாக பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட பிறகு உச்சகட்ட பாதுகாப்பிலும், தயார் நிலையிலும் பிரான்ஸ் உள்ளது. இந்நிலையில், லூவ்ரே அருங்காட்சியகம், வெர்சாய்ஸ் அரண்மனை மற்றும் பாரிஸின் கேர் டி லியோன் ரயில் நிலையம் ஆகியவற்றை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக […]

மத்திய கிழக்கு

எகிப்தின் முதல் ராணியின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000 ஆண்டுகள் பழமையான வைன் !

  • October 17, 2023
  • 0 Comments

எகிப்தின் முதல் பெண் பாரோ (ராணி) என்று நம்பப்படும் பெண்ணின் கல்லறையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுவின் சீல் செய்யப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான ஜெர்மன்-ஆஸ்திரியக் குழு, அபிடோஸில் உள்ள ராணி மெரெட்-நீத்தின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாட்டில்களில் வைன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் “வைன் திரவமாக இல்லை, அது சிவப்பு […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : 2000 துருப்புக்களை தயார் நிலையில் வைத்துள்ள பென்டகன்!

  • October 17, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் 2,000 துருப்புக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், “மத்திய கிழக்கில் உருவாகி வரும் பாதுகாப்பு சூழலுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ” பணியாளர்கள் மற்றும் பல பிரிவுகளை “ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு தயார்படுத்துவதன் மூலம் ஒரு உயர்ந்த தயார் நிலையில் இராணுவத்தினர் இருப்பதாக பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை

முல்லையில் ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறைத்தண்டணை

  • October 17, 2023
  • 0 Comments

பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதியன்று பிறந்து ஒரு நாள் வயதுடைய குழந்தை ஒன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில் அச்சிசுவின் தாய், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த தாய்க்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்தியப் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை: கணவர் கைது

  • October 17, 2023
  • 0 Comments

கனேடிய நகரமொன்றில் இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக பலியானார். 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து கனடா வந்தவர் பல்வீர் சிங் (57). பல்வீந்தரின் மனைவி குல்வந்த் கௌர் (46), தங்கள் மகனுக்கொரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தன் பங்களிப்பைச் செய்வதற்காக தன் மகனுடன் 2019ஆம் ஆண்டு கனடா வந்துள்ளார். அவனுக்கு இப்போது 8 வயதாகிறது. கனடா வந்த பிறகு, கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். […]