செய்தி

மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி – பாகிஸ்தானில் அதிர்ச்சி

  • November 7, 2023
  • 0 Comments

பாகிஸ்தான், காராச்சியில் மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உள்ளதனை சிந்து சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமீபாவால் கராச்சியில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமீபா உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குச் சென்று மூளை திசுக்களை அழித்து, மத்திய நரம்பு மண்டலத்தில் தொற்று நோய் ஏற்படுத்தி […]

மத்திய கிழக்கு

காஸா மருத்துவமனையில் தாக்குதல் – மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • November 7, 2023
  • 0 Comments

இஸ்ரேல் காஸாமீது நடத்திய தாக்குதல்களில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டிவிட்டது. காஸா சுகாதார அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இதுவரையில்லாத அளவு நேற்றிரவு இஸ்ரேலிய ராணுவம் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியது. காஸா சிட்டியின் அல் ஷிஃபா (Al-Shifa) மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். காஸாவில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அவசர மருத்துவ வாகனங்களை அழைக்க இயலவில்லை. கழுதைகள் பூட்டப்பட்ட வண்டியில் காயமடைந்தோர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காஸா வட்டாரத்தை இரண்டு […]

இலங்கை

இலங்கையில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கதி

  • November 7, 2023
  • 0 Comments

பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு மாணவன் காயமடைந்துள்ளார். இந்த நிலையில், மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு

இஸ்ரேலை ஊக்குவிக்கும் அமெரிக்கா – ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு

  • November 7, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இந்த நிலையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார். காசாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் இதுவரை 9,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயனர்களை கண்காணிக்கும் Instagram!

  • November 7, 2023
  • 0 Comments

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரத்தை இணையத்தில் செலவழிப்பதாக தரவுகள் சொல்கிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரே இங்கு ஏராளம். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போடுவது, ரிலீஸ் பார்ப்பது என மக்களிடம் இன்ஸ்ட்டாவின் பயன்பாடு அதிகம் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் தங்கள் பயனர்களின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் மக்கள் வணிக ரீதியாக அதிகம் ஏமாற்றப்படுவதால், அதைத் தடுப்பதற்கு புதிய அம்சத்தையும் இன்ஸ்டாகிராம் அறிமுகம் […]

ஆசியா

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு

  • November 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் வெளிநாட்டு தேசிய அடையாளங்களை அனுமதியின்றி பகிரங்கமாக வெளிக்காட்டுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாடுகளின் அடையாளத்தை கொண்ட ஆடைகளை அணிவதும் குற்றம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மீறினால் சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் S$500 வரை அபராதம் விதிக்கப்படும். அனைத்து வெளிநாட்டு தேசிய சின்னங்களுக்கும் அதாவது அனைத்து வட்டாரங்களில் கொடிகள், பதாகைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். மேலும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 20 வெளிநாட்டவர்கள்!

  • November 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து 20 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்களே பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்கள் 18 தொடக்கம் 61 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் எனவும், உளவுத்துறையினரால் ஆபத்தானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில், “உளவுத்துறையினரால் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என குறிப்பிடப்படும் எந்த ஒரு வெளிநாட்டவர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என குறிப்பிட்டார். ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 178 வெளிநாட்டவர்கள் நாட்டை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 7, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகள் அதிகரிப்பது தொடர்பாக பல அரசியல்வாதிகள் தங்களது கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். ஜெர்மனியில் தொடர்ச்சியாக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக FDP என்று அழைக்கப்படுகின்ற ஆளும் கூட்டு கட்சியில் இருக்கின்ற ஒரு பங்காளி கட்சியான இக் கட்சியுடைய தலைவர் லின் அவர்கள் அகதிகள் ஜெர்மன் நாட்டுக்கு வரும் பொழுது குறிப்பாக டப்ஸ்லிங் நாடுகளுடன் ஒப்பந்தத்துக்கு வரும் பொழுது சமூக உதவி பணத்தை வழங்க கூடாது என்ற கருத்தை […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சர் விடுத்த விசேட அறிவிப்பு

  • November 7, 2023
  • 0 Comments

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு […]

ஆசியா செய்தி

மீண்டும் சிறைக்குத் திரும்பிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்

  • November 6, 2023
  • 0 Comments

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கோவிட்-19 பரிசோதனையில் எதிர்மறையானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்குத் திரும்பியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 70 வயதான நஜிப், பல பில்லியன் டாலர் ஊழல் ஊழல் தொடர்பான வழக்கில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் அவர் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.