இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு இடைக்காலத் தடை!

  • November 9, 2023
  • 0 Comments

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐரோப்பா

பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்… விளக்கேற்றி வழிபட்ட ரிஷி சுனக்

  • November 9, 2023
  • 0 Comments

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் இங்கிலாந்து மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். தீபங்களின் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை வெளிநாடுகளில் வாழும் இந்துக்களின் மத்தியிலும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினரான இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடியுள்ளார். 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் […]

இலங்கை

இலங்கையின் கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதியை பயன்படுத்த தடை!

  • November 9, 2023
  • 0 Comments

இலங்கையின் கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது. இதன்படி, மைட்லாண்ட் வீதி, டொரிங்டன் சந்திப்பில் இருந்து போக்குவரத்து மற்றும் வீதிக்கான அணுகல் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில்  குறித்த வீதி தடைப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பத்தரமுல்லை சீலரதன தேரரும் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலீசார் அவரை நடுவழியில் தடுத்தாலும், பின்னர் கடிதம் கொடுக்க அவருக்கு வாய்ப்பளித்துள்ளதாக சிங்கள ஊடகம் […]

பொழுதுபோக்கு

நேருக்கு நேர் மோதப்போகும் தனுஷ் – ஐஸ்வர்யா… வெற்றி யாருக்கு?

  • November 9, 2023
  • 0 Comments

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேற தயார் நிலையில் 5000 வைத்தியர்கள்

  • November 9, 2023
  • 0 Comments

இலங்கையை விட்டு ஐயாயிரம் வைத்தியர்கள் வெளியேற தயாராகவிருப்பதாக தெரியவந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சி போக்கிற்கு செல்லும். எனவே, அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வைத்தியர்களின் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய […]

செய்தி

அமெரிக்காவில் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த உரிமையாளர்

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த வீட்டு உரிமையாளரை நியுயார்க் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாடகை பாக்கி விவகாரத்தால் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பத்தினர் குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டிற்குள் இருந்துள்ளனர். வீட்டில் தீ பரவிய போதும் தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 66 வயதான ரபீக் இஸ்லாம் என்பவர் புரூக்ளினில் தனக்கு சொந்தமான கட்டடத்தைத் தீ வைத்தார். அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் 8 பேர் குடியிருந்தனர்.வாடகை பாக்கி […]

பொழுதுபோக்கு

“அவன் எவ்ளோ கேவலமானவன்” பொங்கிய பிரபலம்

  • November 9, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இதுநாள் வரை செம ஹிட் ஆனதா என்பது தெரியவில்லை, ஆனால் கடந்த வாரம் பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு நிகழ்ச்சி குறித்து பரபரப்பாக மக்கள் பேசி வருகிறார்கள். ‘பிரதீப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது போல அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். இதனிடையில் நிக்சன் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஷயங்களை பிக்பாஸ் எல்லா போட்டியாளர்களுக்கும் போட்டு காட்டி வருகிறார். நிக்சன், வினுஷாவை பார்த்து ஒரு பெண்ணுக்கு எது […]

இலங்கை

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் – நுவரெலியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

  • November 9, 2023
  • 0 Comments

நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கு எதிராக இன்று நண்பகல் 12.00 மணிக்கு தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நேற்று நுவரெலியா தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த அஞ்சல் முன்னணி தெரிவித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக அஞ்சல் பணியாளர்கள் நேற்று முன்தினம் (08) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை […]

வாழ்வியல்

தினமும் அதிகளவில் பிஸ்கட் சாப்பிடுவதால் காத்திருக்கும் ஆபத்து!

  • November 9, 2023
  • 0 Comments

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்டை நாம் பால் மற்றும் டீ, காபியில் நனைத்து சாப்பிடுகிறோம் இவ்வாறு சாப்பிடும்போது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம். பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதுவே காலை உணவாக இருக்கிறது. இது சாப்பிடுவதற்கு மிக எளிதாகவும் விரைவாகவும் சாப்பிடக்கூடிய பொருளாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். இதைப் பெற்றோர்களும் சத்தான உணவு தானே என்று திடமாக நம்புவது மேலும் இந்த பழக்கம் அதிகரிக்கிறது.பிஸ்கட்டில் கலோரி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை காலவரையின்றி தடுத்து வைக்க தடை?

  • November 9, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை காலவரையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்த முடியவில்லையென்றால், தடுப்பு மையங்களில் காலவரையின்றி தடுத்து வைக்கலாம் என 2004ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படும். மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதி ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. புதிய முடிவின் மூலம், அவுஸ்திரேலியாவில் பல தடுப்பு மையங்களில் […]