தவெகவுக்கு அடுத்த இடி:கரூர் தவெக கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயம் – 02 பிரிவுகளில் வழக்கு
தவெக கொள்கை விளக்க கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயமடைந்தார். இது தொடர்பாக தவெக நிர்வாகி மீது இரு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் 80 அடி வீதியில் தவெக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கரூர் மாநகராட்சியின் அனுமதியின்றி அப்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இரவு உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மேடைக்கு அருகே […]













