உலகம் செய்தி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை?

  • March 26, 2026
  • 0 Comments

ஜப்பானின் தீவான ஹொன்ஷூவின் கடற்பகுதியில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் தற்போது வரை விடுக்கப்படவில்லை.

உலகம் செய்தி

வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் தீவிரம் – ஒருவர் உயிரிழப்பு , 25 பேர் வைத்தியசாலையில்

  • March 26, 2026
  • 0 Comments

வடக்கு இஸ்ரேலின் நஹாரியா பகுதியில்  ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவசர சேவை மாகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 50 வயதுடைய ஒருவருக்கு கை, கால்களில்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் சிறியளவான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர சேவை கூறியுள்ளது. இதேவேளை, லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உலகம் செய்தி

போரின் பொருளாதார சூறாவளி – ஏழ்மையான நாடுகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் விளைவுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலை உருவாக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதால், பல நாடுகள் உணவுப் பயிர்களை வளர்க்க தேவையான உரங்கள் மற்றும் உபகரணங்களை பெற முடியாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது. தோஹா பட்டதாரி ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த சுல்தான் பராகத் கூறுவதன் படி, “எரிசக்தி விநியோகம் முக்கியமாக இருந்தாலும், உணவுப் பொருட்கள் நாட்டிற்கு செல்லும் வழிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு உண்மையான நண்பனாக ரஷ்யா துணை நிற்கும்: அந்நாட்டு பிரதி அமைச்சர் உறுதி!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக […]

இலங்கை செய்தி

தேசிய நாமல் உயன ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனம்!

  • March 26, 2026
  • 0 Comments

தேசிய நாமல் உயனவை ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் உயன, தேசிய, சமய, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாகப் பல பெறுமதிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும். இதன் நிறுவனர் வண, வனவாசி ராகுல […]

உலகம் செய்தி

ஈரானின் ஏவுகணை முயற்சி – 15 இடைமறிப்பு

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான் இன்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி 15 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும் ஐக்கிய அரபு அமீரகம் அனைத்து 15 ஏவுகணைகளையும் இடைமறித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னர் வெளியாகிய தகவலின் படி, இந்த இடைமறிப்பில் ஒரு ஏவுகணையின் சிதறல்கள் அபுதாபியில் இருவர் உயிரிழப்பிற்கு காரணமானது. சம்பவம் ஏற்கனவே பல இடங்களில் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அந்தச் சிதறல்கள் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளன.

உலகம் செய்தி

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க தயாராகும் ஹூதிகள்!

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் Houthis, தெரிவித்துள்ளனர். தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக ஹூதி அமைப்பின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் தற்போதைய மோதல்களில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே, தாங்கள் நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு […]

இந்தியா செய்தி

60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது

  • March 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஜிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல், டீசல், எல்பிஜி-க்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அவை வழக்கம்போல் இயங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் விற்பனையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. […]

இலங்கை செய்தி

ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ […]

இலங்கை செய்தி

சமஷ்டியே தமிழர்களின் கோரிக்கை: கனடா தூதுவரிடம் சாணக்கியன் எடுத்துரைப்பு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, வலிந்து காணாமல் […]