இந்தியா செய்தி

இந்தியா: அதிபர் தாக்கியதால் கண் பார்வையை இழந்த 3ம் வகுப்பு மாணவி

  • February 27, 2025
  • 0 Comments

இந்தியாவில் ஒரு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதனால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும், பள்ளி அதிபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரி தெரிவித்தார். போக்பூர் மித்தோனி தொடக்கப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் தாயார் ஜோதி காஷ்யப், அதிபர் கீதா கரால் மீது மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்ததை அடுத்து, அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தனது புகாரில், அதிபர் ஏற்படுத்திய கடுமையான […]

ஆசியா செய்தி

பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான்

  • February 27, 2025
  • 0 Comments

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தஜிகிஸ்தானுடன் சர்ச்சைக்குரிய பிரதேசங்களை பரிமாறிக்கொள்வதாக கிர்கிஸ்தான் அறிவித்துள்ளது. இது மத்திய ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையேயான பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டு வருகிறது. 1991ல் இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் அவ்வப்போது கொடிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன, தொலைதூரப் பகுதியில் நீர் மற்றும் வளங்களை அணுகுவதற்காக அண்டை நாடுகளும் சண்டையிட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிர்கிஸ்தான் நிலம் மற்றும் பகிரப்பட்ட நீர் வளங்களை சிறப்பாக […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்

  • February 27, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடி வருகிறார். குவாலியரின் கமலா ராஜா மருத்துவமனையின் மருத்துவர்கள், அவளது அந்தரங்க உறுப்புகளில் 28 தையல்களும், கொலோஸ்டமி அறுவை சிகிச்சை தேவை என்று தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 17 வயது சிறுவன் என்றும், அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும், சிறுமியின் தலையை சுவரில் பலமுறை மோதியதாகவும், பின்னர் கொடூரமாகத் தாக்கியதாகவும் […]

இந்தியா செய்தி

தம்பி, பாட்டி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொன்ற இளைஞர்

  • February 27, 2025
  • 0 Comments

கேரளாவில், 13 வயது தம்பி, பாட்டி, காதலி உட்பட ஐந்து பேரை, 23 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பெருமலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபான், 23. இவரது தந்தை ரஹீம், வெளிநாட்டில் வசிக்கிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இவர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளார். இந்நிலையில், பாங்கோடு பகுதியில் உள்ள பாட்டி சல்மா பீவியின் வீட்டுக்கு சென்ற அபான், சுத்தியலால் அவரை அடித்துக் கொன்றார். தொடர்ந்து, […]

உலகம் செய்தி

ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி

  • February 27, 2025
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்யா ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ரஷ்யா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் […]

இலங்கை செய்தி

சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர் தான் காவலில் உள்ளவரா என்பதை அறிய விசாரணை

  • February 27, 2025
  • 0 Comments

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்தக் கொலையைச் செய்தாரா என்பது குறித்து எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, அன்றைய தினம் நீதிமன்றத்தின் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சந்தேக நபரின் முகத்தை அடையாளம் காண சிறப்பு பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலதிகமாக சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ.க்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் […]

உலகம் செய்தி

காஸாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் உயிரிழப்பு

  • February 27, 2025
  • 0 Comments

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளதாகவும் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் […]

இலங்கை

இலங்கை : குழந்தைகள் வன்கொடுமை தொடர்பாக மூத்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

2021 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவரைக் கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாணத்தின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளரும் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடுத்து 49 மற்றும் 57 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகன் மற்றும் கனேடிய தயாரிப்புகள் மீதான கூடுதல் வரிகள்

  • February 27, 2025
  • 0 Comments

மெக்சிகன் மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் தனது திட்டம் மார்ச் 4 முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் இன்னும் பாய்ந்து வருவதே வரி விதிப்பதற்கான காரணம் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 4 ஆம் திகதி விதிக்கப்பட்ட 10 சதவீத வரியுடன் கூடுதலாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியை கூடுதலாக விதிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறினார். […]

உலகம் செய்தி

விண்வெளிக்கு செல்ல உள்ள பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி

  • February 27, 2025
  • 0 Comments

பாப் நட்சத்திரம் கேட்டி பெர்ரி, ப்ளூ ஆரிஜினின் அடுத்த விண்வெளிப் பயணத்தில் ஆறு பேர் கொண்ட, முழுப் பெண் குழுவினரின் ஒரு பகுதியாக செல்ல உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கேட்டி பெர்ரி, ப்ளூ ஆரிஜின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவியான பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் மற்றும் CBS மார்னிங்ஸின் இணை தொகுப்பாளர் கெய்ல் கிங்குடன் இணைந்து பயணத்தைத் தொடங்குவார். விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பெயரிடப்பட்ட அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில், 2021 […]