இலங்கை

மட்டக்களப்பில் மதிய உணவுப் பொதி பெற்ற சட்டத்தரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • May 25, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நகரின் உணவகம் ஒன்றில் வாங்கிய மதிய உணவுப் பொதி ஒன்றில் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு, சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று முறைப்பாடு அளித்துள்ளார். இதையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த உணவகத்தைச் சோதனையிட்டு, அங்கு மனித பாவனைக்கு ஒவ்வாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், மீட்கப்பட்ட மனித பாவனைக்கு ஒவ்வாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்க […]

செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • May 25, 2025
  • 0 Comments

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவை, கொட்டிக்காவத்தை, முல்லேரியா, ஐ.டி.எச். பிரதேசம், மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, மொரட்டுவை, மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வெளிநாட்டவர்கள்

  • May 25, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் புகலிட அமைப்பு குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக சில அகதிகளை மீண்டும் கிரேக்கத்திற்கு நாடுகடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஜெர்மனி பெருமளவில் நிறுத்தி வைத்திருந்தது. ஏற்கனவே கிரேக்கத்தில் புகலிடம் கோருபவர்களாக பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜெர்மனிக்கு பயணம் செய்த அகதிகளை நாடு கடத்துவதற்காக ஜெர்மனி இதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது. குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள், வயதான ஆண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் போன்றோர் மட்டும் நாடுகடத்தலில் இருந்து விலக்கப்படுவார்கள். கடந்த மாதம் […]

ஆசியா

பாகிஸ்தானை உலுக்கிய புழுதிப் புயல் – லாகூரில் 8 பேர் உயிரிழப்பு

  • May 25, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் – லாகூரில் வீசிய கடும் புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் வீசிய புழுதிப் புயலால் ஏராளமான மரங்கள் அடியோடு விழுந்தன. இது தொடர்பாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மக்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்ததாலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் தவிர 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டென்மார்க் எடுத்த தீர்மானம் – 70 ஆக உயர்ந்த ஓய்வூதிய வயது

  • May 25, 2025
  • 0 Comments

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டென்மார்க் அரசாங்கம் தனது ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் […]

உலகம்

24 மணி நேரத்தில் 2-வது முறையாக எக்ஸ் தளம் முடக்கம்! அதிர்ச்சியில் மஸ்க்

  • May 25, 2025
  • 0 Comments

எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம் நேற்று மாலை திடீரென முடங்கியது. இந்திய நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை. சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல்களைப் பதிவேற்ற முயற்சி செய்யும்போது, “ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்” என்ற நிலைத்தகவலையே காட்டுகிறது. முன்னதாக நேற்றும் சர்வதேச […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மொழி தெரியா பிரச்சினைக்கு முடிவு – கூகுள் மீட்டில் புதிய வசதி

  • May 25, 2025
  • 0 Comments

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அம்சம் உங்கள் பேச்சை உடனே வேறு மொழியில் மாற்றி, உங்கள் குரலில் ஒலிக்கச் செய்யும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் தமிழில் “வணக்கம்” என்று பேசினால், மறுபுறம் உள்ளவருக்கு அதை ஆங்கிலத்தில் “Hello” என்று ஒழிக்க செய்யும். அது மட்டுமின்றி உங்கள் குரலின் உணர்ச்சியும், இயல்பான தன்மையும் கொஞ்சம் கூட […]

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழ் வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

  • May 25, 2025
  • 0 Comments

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மே 7 ஆம் தேதி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யார் கேப்டன் பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து கொண்டிருந்த வேளையில், 25 வயதான இளம் வீரர் […]

உலகம்

தென்கொரியாவில் கடத்தப்பட்ட சிறுமி – 44 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் இணைந்த மகள்

  • May 25, 2025
  • 0 Comments

தென்கொரியாவில் தாய் தனது மகளுடன் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 1975ஆம் ஆண்டில் ஹான் டே சூன் என்பவரின் மகள் கியுங் ஹா கடத்தப்பட்டு அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டார். கியுங் ஹா வீட்டுக்கருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஹான் கடைக்குச் சென்றார். வீட்டுக்குத் திரும்பியபோது அவருடைய மகளைக் காணவில்லை என்பது தெரிய்வந்தது. 2019ஆம் ஆண்டில் மரபணு ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஹான்னின் மகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. கியுங் ஹா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தாதியாகப் பணிபுரிகிறார். அவர் […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  • May 25, 2025
  • 0 Comments

இலங்கையின் சில பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில், 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, மேல், […]