வட அமெரிக்கா

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற கோரி மெக்சிகோவில் மக்கள் போராட்டம்

  • July 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர்ந்தோரை தடுக்கக் கோரி மெக்சிகோவில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசாத மக்களை வெளியேற்றவும், அமெரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை தடுக்கவும் வலியுறுத்தி மெக்சிகோ தலைநகரில் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். அமெரிக்க குடியேற்றவாசிகளின் வருகையால் ஏற்படும் பிரச்சனைகளை முன்வைத்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிடும்போது மெக்ஸிகோ நகரின் வாழ்க்கைச் செலவு குறைவாக இருப்பதால், வசதியான வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், மெக்ஸிகோ சிட்டி நகரில் குவிந்து வருவதாக உள்ளூர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரின் றப்பர் படகை கத்தி கொண்டு கிழித்த அதிகாரிகளால் சர்ச்சை

  • July 6, 2025
  • 0 Comments

பிரான்ஸ் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் சென்ற றப்பர் படகை, பிரெஞ்சு அதிகாரிகள் கத்தி கொண்டு கிழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மனிதாபிமானமற்ற செயல் என புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் Osmose 62 அமைப்பின் தலைவர் Dany Patoux கண்டித்துள்ளார். இது புலம்பெயர்பவர்களுக்கு உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும் என்றார். இந்த நடவடிக்கைகள், கடல்சார் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், புலம்பெயர்பவர்களை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் பிரித்தானியா அரசாங்கம் இந்த புதிய கடுமையான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. […]

வாழ்வியல்

நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவர்

  • July 6, 2025
  • 0 Comments

கெட்டுப்போன உணவைச் சாப்பிட முடியுமா என்று கேட்டால், “கண்டிப்பாக மாட்டோம், எவ்வளவு பசியாக இருந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வோம்” என்பதுதான் அனைவரின் பதிலும். ஆனால், தெரியாமல் சிலர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது உண்மைதான். நிறைய பேருக்கு நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளது. குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் இரு கைகளிலும் நகங்களை நீளமாக வளர்த்து, அழகாக நெயில் பாலிஷ் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், சிலர் டென்ஷனாக இருக்கும்போது, பதட்டமாக […]

ஆசியா

உலகில் முதன்முறையாக ஜப்பான் எடுக்கும் முயற்சி

  • July 6, 2025
  • 0 Comments

உலகில் முதன்முறையாக ஆழ்கடலில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் அரிய கனிமங்களின் விநியோகம் தடையின்றித் தொடர ஜப்பான் உறுதியளித்தது. மின் வாகனங்கள், காற்றாலைகள், ஏவுகணைகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் அரிய கனிமங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புத்தாக்கத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான அரிய கனிமங்களை வழங்குவதில் சீனாவின் செல்வாக்குப் பெருகுவதாக அக்கறை எழுந்துள்ளது. எனவே, கடலிலிருந்து அரிய கனிமங்களைச் சலித்தெடுக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. மூன்று வாரத்தில் […]

வட அமெரிக்கா

டெக்சஸ் வெள்ளத்தில் 43 பேர் மரணம் – பணியில் அமெரிக்க மீட்புக் குழுவினர்

  • July 6, 2025
  • 0 Comments

டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43க்கு உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை அடையாளம் கண்டு மீட்க அமெரிக்க மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களில் 28 பெரியவர்களும் 15 சிறுவர்களும் அடங்குவர். கோடை முகாமிலிருந்த 27 பெண் பிள்ளைகள் உட்பட பலரைக் காணவில்லை. தேடல் மீட்பு நடவடிக்கை தொடரும் என டெக்சஸ் ஆளுநர் கிரெக் அபொட் குறிப்பிட்டுள்ளார். கடலோரக் பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் உதவுகின்றனர். பேரிடரைச் சமாளிக்க மாநில அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகச் சொல்கிறது வெள்ளை மாளிகை. […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டிரம்பை நேரடியாக எதிர்க்கும் மஸ்க் – புதிய கட்சி ஆரம்பம்

  • July 6, 2025
  • 0 Comments

“அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியுள்ளார். அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது […]

செய்தி

அதிவேக சதம் – வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

  • July 6, 2025
  • 0 Comments

9 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சனிக்கிழமை இந்த சாதனையை அவர் படைத்தார். இந்தப் போட்டியில் 52 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். இதன் மூலம் 53 பந்துகளில் சதம் விளாசிய பாகிஸ்தானின் கம்ரான் குலாம் சாதனையை அவர் முறியடித்தார். இந்த ஆட்டத்தில் 78 பந்துகளில் 143 ரன்களை அவர் எடுத்தார். […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • July 6, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைபன் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

தைவானைச் சுற்றி அதிகரித்த இராணுவ நடவடிக்கை – சீனாவை குற்றம் சுமத்தும் அமெரிக்கா

  • July 6, 2025
  • 0 Comments

தைவானைச் சுற்றி சீனாவின் அதிகரித்த இராணுவ நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது. தைவானின் வருடாந்திர ஹான் குவாங் இராணுவப் பயிற்சிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அறிக்கை வந்தது. தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, வியாழக்கிழமை மட்டும் தைவானுக்கு அருகில் 41 சீன இராணுவ விமானங்களும் எட்டு கடற்படைக் கப்பல்களும் இயங்குவது கண்டறியப்பட்டது. விமானங்களில், 27 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் மையக் கோட்டைக் கடந்து, தீவின் வடக்கு, மத்திய மற்றும் தென்மேற்கு […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்

  • July 6, 2025
  • 0 Comments

கொஸ்கம, சுடுவெல்ல பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்தவர்கள் ஒரு தாய், மகள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றொரு ஆண் ஆவர். அவர்கள் 12, 30 மற்றும் 44 […]