லியோ வசூலை பின்னுக்கு தள்ளி மைல்கல் சாதனை படைத்த கூலி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 151 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் நாளில் மிகப்பெரிய ஓபனிங் சாதனையை படைத்த படமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் அடித்து நொறுக்கி அசால்ட்டு காட்டியிருக்கிறார். […]













