இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கனடா வெளியுறவு அமைச்சர்
அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இன்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை (S. Jaishankar) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சரிந்த உறவுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin […]













