பங்களாதேஷில் (Bangladesh) ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 09 பேர் பலி!
பங்களாதேஷ் (Bangladesh) தலைநகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மற்றும் இராசாயனக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்காவின் மிர்பூர் ( Dhakas Mirpur) பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் குறைந்தது ஒன்பது உடல்களை மீட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி தல்ஹா பின் ஜாஷிம் (Talha bin Jashim) தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடைத் […]













