இலங்கை

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 25, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான பெயர்கள், மொழி மற்றும் பாடங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்தத் திகதிக்கு பிறகு எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது என்று துறை உறுதிப்படுத்தியுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை 2,362 தேர்வு […]

ஐரோப்பா

இராஜதந்திரத் தீர்வை நெருங்கும் ரஷ்யா – உக்ரைன் போர் – புட்டின் தூதர் அறிவிப்பு

  • October 25, 2025
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு “இராஜதந்திரத் தீர்வுக்கு மிக அருகில்” இருப்பதாக அதிபர் புட்டினின் சிறப்புத் தூதர் ஒருவர் அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev)அமெரிக்காவில் இருக்கும்போது, CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார். “ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகள் இராஜதந்திரத் தீர்வுக்கு நியாயமான […]

இலங்கை

வடக்கு முதல்வர் விவகாரம் – ஸ்ரீதரன், சுமந்திரனை இணைக்க தீவிர சமரச முயற்சி!

  • October 25, 2025
  • 0 Comments

அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பெரும் தூண்களான ஸ்ரீதரனையும், சுமந்திரனையும் சமரசப்படுத்துவதற்குரிய முயற்சியில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி வெற்றிநடை போட வேண்டுமெனில் இரு தரப்பினரும் அரசியல் முரண்பாடுகளை களைந்து, ஓரணியில் திரள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு முதல்வர் வேட்பாளராக சிறிதரனை களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சி பரிசீலித்துவருகின்றது. இதற்காக எம்.பி. பதவியை அவர் […]

வாழ்வியல்

இலகுவாக உடல் எடையைக் குறைக்க 10 எளிய வழிகள்

  • October 25, 2025
  • 0 Comments

வாழ்க்கை முறையில் எளிய மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலமே சாதாரணமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 4 மாதங்களில் 25 கிலோ எடையைக் குறைத்த அனுபவம் கொண்ட உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அமாகா என்பவர், உடல் எடையைக் குறைப்பதற்கான 10 முக்கிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார். நீங்கள் பசியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறைவான கலோரி அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் 80% சிக்கன், மீன், […]

இலங்கை

“தமிழ்த் தேசிய கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் தமிழர்களுக்கான தீர்வு மூடி மறைக்கப்படுகின்றது” – பொதுச்செயலாளர் ஜயசூரிய

  • October 25, 2025
  • 0 Comments

“தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தின் முக்கியத்துவமும் மூடி மறைக்கப்பட்டுவருகின்றது. எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கில் இருந்து ஒருமித்த குரல் அவசியம்.”இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின்(United Socialist Party) பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய(Siritunga Jayasuriya) வலியுறுத்தினார். மாகாணசபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் iftamil.com இடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஆளுங் கட்சிக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தல்களில்கூட ஆளுங்கட்சிக்கு தோல்வி […]

இலங்கை

யாழில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு – இளைஞன் படுகாயம்

  • October 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் காவல்துறை இடைமறித்தனர். இதன்போது, காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.காயமடைந்த சாரதி, […]

உலகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவருக்கு அழைப்பு விடுத்த இலங்கை

  • October 25, 2025
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கிற்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் சந்தித்து பேச்சு நடத்தியபோhதே மேற்படி அழைப்பை விடுத்தார். இதன்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அங்கு கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் […]

ஐரோப்பா

லிதுவேனியாக்குள் நுழைந்த மர்ம பலூன்களால் பரபரப்பு – விமான நிலையங்களுக்கு பூட்டு

  • October 25, 2025
  • 0 Comments

லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று லிதுவேனியா எல்லையை நேற்று கடந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து இரண்டு விமான நிலையங்களும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்ட நிலையில், பெலாரஸ் எல்லை நாளை வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிதுவேனியா எல்லைக்குள் கடந்த வருடம் 966 ஹீலியம் பலூன்கள் நுழைந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500 பலூன்கள் பறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் மர்மம் – பல ரகசியங்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள ஆதாரங்கள்

  • October 25, 2025
  • 0 Comments

முதன்முறையாக நிலவின் இருண்ட பக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்தாண்டு சாங்’இ-6 (Chang’e-6) விண்கலத்தின் மூலம் நிலவில் இருந்து மண் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் சூரிய குடும்பம் உருவாவதற்கு முன்னைய காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் அரிய விண்கல்லின் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மிகவும் அரிய வகை விண்கல்லின் துண்டுகளை குவாங்சோ இன்ஸ்டிடியூட் ஒப் ஜியோகெமிஸ்ட்ரி (Guangzhou Institute of Geochemistry) தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் துண்டுகள் பொதுவாக சூரிய குடும்பத்தின் […]

உலகம் முக்கிய செய்திகள்

சிங்கப்பூர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய்த்தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை

  • October 25, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் திடீரென சளிக்காய்ச்சல் (Flu) பரவல் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரிக்கின்றன. எனினும் இம்முறை வழமையை விட நோய்த் தொற்று முன்கூட்டியே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை சிங்கப்பூரில் மட்டும் இல்லை. அண்டை நாடுகளான ஜப்பான், மலோசியா போன்ற நாடுகளில் காணப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சளிக்காய்ச்சலுடன் […]