குளிர் பருவம் ஆரம்பம் – பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை!
பிரித்தானியாவில் NHS தலைவர்கள் “ஃப்ளூ தடுப்பூசி SOS” பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். குளிர் பருவம் ஆரம்பித்துள்ள நிலையில், மிகக் கடுமையான காய்ச்சல் தொற்றுநோயை எதிர்த்து தடுப்பூசி போடுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். H3N2 காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் H3N2 வகை தொற்றின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹிலாரி ஜோன்ஸ் ( Hilary Jones) எச்சரித்துள்ளார். இது நோய் எதிர்ப்பு சக்தியை பயனற்றதாக்கிவிடும் எனக் குறிப்பிட்டுள்ள […]













