உலகம்

இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து – 08 பேர் பலி!

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் (Kalimantan) ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹெலிகாப்டர் நேற்று காலை 8.34 இற்கு பயணத்தை ஆரம்பித்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்த நிலையில்,  இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் (Kalimantan)  உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.

சம்பவ இடத்தில் 08 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும் அவை  பொன்டியானாக்கிற்கு (Pontianak)  கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்