சுகாதார திணைக்கள மீளாய்வு கூட்டம்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் இணைக்கப்பட்ட திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் மற்றும் மீளாய்வு தொடர்பில்லாத கலந்துரையாடல் (24) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதில், அமைச்சு மற்றும் அதன் இணைக்கப்பட்ட நிறுவனங்களான மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச ஆயுர்வேத திணைக்களம், மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாகாண சிறுவர் மற்றும் நன்னடத்தை திணைக்களம் ஆகியவற்றின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர மூலதன அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.








