இந்தியா செய்தி

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு மோடிக்கு ஈரான் அழைப்பு

புதுடெல்லியிலுள்ள ஈரான் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்ட இந்த அழைப்பிதழ், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்குரிய அரசு முறை இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லியிலுள்ள ஈரான் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்ட இந்த அழைப்பிதழ், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது.

கமேனியின் இறுதி ஊர்வலத்திற்கு சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய நிகழ்வில் இந்தியத் தரப்பில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த முடிவை இந்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த காலங்களில் இரு நாடுகளும் சாபஹார் துறைமுகத் திட்டம் போன்ற முக்கிய ஒப்பந்தங்களில் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், தற்போதைய இந்த அழைப்பு ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இறுதிச்சடங்கு ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி