மத்திய கிழக்கு

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்; நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற கொடூரம்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த பெண்ணின் உடலை காலால் மிதித்தபடி நிர்வாணமாக டிரக்கில் தூக்கிச் செல்லும் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த உடலின் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்கின்றனர்.அதுமட்டுமல்லாது ,அதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்ற காணொளி மனித உரிமை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

போரில் உயிரிழந்த பெண் ஜெர்மனியைச் சேர்ந்த ஷானி லவுக் (30) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்; நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற கொடூரம் | German Woman Dies In Israel

நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை முதன்முதலாக தொடங்கிய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டுள்ளார்.

டிரக்கில் மகளின் உடலை கொண்டு செல்வதை வீடியோவில் பார்த்து கதறி அழுத ஷானியின் தாயார் ரிக்கார்டா, தனது மகளின் உடலை கண்டுபிடிக்க பாலஸ்தீனர்கள் உதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Israel-Palestine Conflict: German Woman's Body Paraded Naked By Hamas;  Mother Seeks Help - News18

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.