விளையாட்டு

உலகக்கோப்பை அரையிறுதிக்கு தெரிவான நான்கு அணிகள்

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

கடைசி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அணி வெளியேறியது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத சூழல். இருப்பினும் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்து.

இதனால், அரையிறுதிக்கு 4வது அணியாக நியூசிலாந்து முன்னேறியுள்ளது.

இதையடுத்து வரும் 15-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ