இலங்கை

இலங்கையில் அடுத்தக்கட்ட திட்டத்தை வெளிப்படுத்திய மஹிந்த!

அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மீண்டும் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கும், எதிரணி பக்கம் செல்வதற்குமான நிலைமை தமக்கு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் தம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்மீது சேறு பூசும் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் இவற்றை புரிந்துகொண்டு மக்களில் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் வரவேற்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்