உலகம்

ஆஸ்திரேலியா முழுவதும் தீவிரமாக பரவும் காய்ச்சல் – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் பாதிப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆண்டு மிகக் குறைந்த தடுப்பூசி விகிதம் மற்றும் சாதனை எண்ணிக்கையிலான இன்ப்ளூயன்ஸா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டு 410,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும், ஒக்டோபரில் மட்டும் 13,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தடுப்பூசி விகிதங்களும் குறைந்துள்ளன. 25 சதவீதம் சிறுவர்களுக்கும், 60 சதவீதம் பெரியவர்களும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தேசிய சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும் என மருத்துவர் மைக்கேல் ரைட் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவது உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதுகாப்பதாகும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும், குயின்ஸ்லாந்து மற்றும் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பயப்படும் சிறுவர்களுக்கு ஸ்ப்ரே தடுப்பூசி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய காய்ச்சல் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது இப்போது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்