ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே படகில் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு
ஸ்பெயினின் கெனரி தீவுகளுக்கு அருகே படகொன்றில் 05 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 27 நாட்களுக்கு முன்பு காம்பியாவில் இருந்து புறப்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் ஏராளமானவர்கள் பயணித்த நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த எண்ணிக்கை சரிபார்க்கப்படவில்லை என ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுவினர் படகை அடைந்தபோது ஐவரின் சடலங்களை மட்டுமே மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




