இலங்கை செய்தி

யாழில் கோர விபத்து: பிரான்ஸ் தம்பதியினர் உட்பட நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (12) காலை ஊர்காவல்துறை நோக்கி பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

” பிரான்ஸ நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாண பக்கம்நோக்கி திருப்புவதற்கு முற்பட்டவேளை, பின்னால் வந்து கார் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பிரான்ஸ் தம்பதியினர் மற்றும் காரின் சாரதி என நால்வர் படுகாயம் அடைந்தனர்.

அத்துடன் முச்சக்கர வண்டி மற்றும் கார் என்பன சேதமடைந்துள்ளன.
படுகாயம் அடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை