இந்தியா

இந்தியாவில் பெண்ணின் வயிற்றிலிருந்து 2 கிலோகிராம் முடியை அகற்றிய மருத்துவர்கள்

உத்தரப் பிரதேசத்தில் வயிற்று வலியால் அவதியுற்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 2 கிலோகிராம் முடியை அகற்றியுள்ளனர்.

பெய்ரேலியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தமது 16 வயது முதல் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். பல தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தொடர் சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் மீண்டும் வயிற்று வலியால் துடிக்க, கடந்த மாதம் 22ம் திகதி பெய்ரேலி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழு முடிவு செய்தது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து 2 கிலோகிராம் முடி கண்டுபிடிக்கப்பட்டதே அதற்குக் காரணம். அந்த முடிதான் அப்பெண்ணின் வயிற்று வலிக்குக் காரணமாக இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

அந்தப் பெண்ணுக்கு அரிய உளவியல் பிரச்சினை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அது, ‘ட்ரிக்கோஃபேஜியா’ என்று அழைக்கப்படுகிறது. அதுபோன்ற பிரச்சினை உடையவர்கள் தங்களை அறியாமலேயே முடியைச் சாப்பிடுவார்கள்.

சிறுவயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்கு அத்தகைய பிரச்சினை இருந்துள்ளது. பெய்ரேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் அத்தகைய பிரச்சினையைக் கொண்ட ஒரே பெண் அவர்தான்.

இந்நிலையில், சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே