இலங்கை: பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட 56 கைதிகள்!
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் இன்று நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கு அமைய குறித்த கைதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறை தண்டனை அனுபவித்துவந்த பாகிஸ்தான் கைதிகளே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)