ஜெர்மனி – அமெரிக்கா உறவில் விரிசல்!
அமெரிக்காவிற்கும் – ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வருகிறது.
ஜெர்மனியின் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை விமர்சித்ததை தொடர்ந்து உறவில் ஏற்பட்ட விரிசல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் குறித்து கருத்து தெரிவிப்பதை விட, ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விவகாரங்களில் மெர்ஸ் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று பரிந்துரைத்தார்.
இது தொடர்பில் ட்ரம்ப் இட்டுள்ள பதிவில், ஜெர்மனியின் அதிபர், ரஷ்யா/உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் (அதில் அவர் முற்றிலும் திறனற்றவராக இருந்துள்ளார்!), தனது சீர்கெட்ட நாட்டை, குறிப்பாக குடிவரவு மற்றும் எரிசக்தித் துறையைச் சரிசெய்வதிலும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.
ஈரான் அணு அச்சுறுத்தலை ஒழிப்பவர்களின் பணிகளில் தலையிடுவதில் குறைந்த நேரத்தைச் செலவிட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜெர்மனியில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





