ஹைட்டியில் தொடரும் வன்முறை : துரித நடவடிக்கைக்கு ஐ.நா அழைப்பு!
ஹைட்டியில் இந்த ஆண்டு நடந்த கும்பல் வன்முறையில் குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 12 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் பரவலாகக் காணப்படும் தண்டனையின்மையைக் கையாளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2021-ல் அப்போதைய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ஹைட்டி மோசமடைந்து வரும் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஆயுதமேந்திய கும்பல்கள் […]



