ஐரோப்பா

ரஷ்யாவில் 60 அடி ஆழமான ஏரியில் மூழ்கிய பேருந்து – 07 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள உறைந்த பைக்கால் ஏரியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீன சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஏரியானது சுமார் 60 அடி ஆழம் கொண்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் மேற்பரப்பில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பனிக்கட்டி வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்