ஐரோப்பா

ஆண்ட்ரூவின் கைது விவகாரம் : நாடாளுமன்ற விசாரணையை தொடங்க பரிசீலனை!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் தொடர்பில் பிரித்தானிய மன்னரின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor)   இந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்  , இங்கிலாந்து வர்த்தக தூதர்களின் பங்கு குறித்து நாடாளுமன்ற விசாரணையைத் தொடங்க செல்வாக்கு மிக்க எம்.பி.க்கள் குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விசாரணை, வர்த்தக தூதர் அமைப்பிற்குள் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து வர்த்தகத் தூதர்களின் நியமனம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து எம்.பி.க்கள் இன்னும் விரிவாகப் பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் மன்னர் தனது சகோதரர் இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்ட போதிலும், லார்ட் பீட்டர் மண்டேல்சன் ( Lord Peter Mandelson ) ஆண்ட்ரூவை வர்த்தக தூதராக நியமிக்க முன்மொழிந்திருந்தார். இதற்கமைய அவர் சிறிது காலம் சிறப்பு வர்த்தக தூதராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்