வட அமெரிக்கா

அமெரிக்காவில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து – 37 மாணவர்களைக் காப்பற்றிய கர்ப்பிணி

அமெரிக்காவின் Wisconsin மாநிலத்தின் Milwaukee நகரில் உள்ள பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றிய நிலையில் அதில் பயணித்த 37 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Milwaukee Academy of Science பாடசாலை மாணவர்களைப் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் பெண் ஓட்டுநர் ஏதோ எரிவதை உணர்ந்தார்.

24 வயது Imunek Williams என்ற அந்த பெண் சுமார் ஓராண்டுக் காலமாக பேருந்து ஓட்டுநராக பணிபுரிகிறார். எரியும் வாசனையை உணர்ந்த அவர், அது மற்ற காரிலிருந்து வருகிறது என்று முதலில் நினைத்தார்.

தமது பேருந்திலிருந்து புகை வருவதைப் பார்த்ததும் உடனடியாகப் பேருந்தை நிறுத்தி மாணவர்களை வெளியேற்ற ஆரம்பித்தார். பேருந்தில் இருந்த 37 மாணவர்கள் அனைவரையும் அவர் பாதுகாப்பாக வெளியேற்றினார்.

கடைசி மாணவர் பேருந்திலிருந்து வெளியேறிய சில வினாடிகளுக்குப் பிறகுப் பேருந்தில் தீப்பற்றியது. மாணவர்களைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல மற்றொரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தையை ஈன்றெடுக்க விருக்கும் ஓட்டுநர் வில்லியம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் துணிகரச் செயலைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்