செய்தி விளையாட்டு

1000 தடவைகள் இனவெறி தாக்குதல்: இளம் கால்பந்து நட்சத்திரம் கடும் கவலை

தான் ஆயிரம் தடவைகள் இனவெறி அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால் தாங்கள் டந்துகொள்ளும் விதம் இனவெறி சார்ந்தது என்பதை பலரும் உணர்வதில்லை என்றும் பார்ட்செலோனா Barcelona அணியின் முன்கள வீரர் லாமின் யமால் (Lamine Yamal) தெரிவித்துள்ளார்.

தான் ஆயிரம் தடவைகள் இனவெறி அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால் தாங்கள் டந்துகொள்ளும் விதம் இனவெறி சார்ந்தது என்பதை பலரும் உணர்வதில்லை என்றும் பார்ட்செலோனா Barcelona அணியின் முன்கள வீரர் லாமின் யமால் (Lamine Yamal) தெரிவித்துள்ளார்.

19 வயதான இந்த இளம் நட்சத்திர வீரர், கால்பந்து உலகில் குறுகிய காலத்தில் அடைந்த அபார வளர்ச்சியின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவெறித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.

கடந்த 2024 அக்டோபரில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின் போது லாமின் யமால், ரபின்ஹா மற்றும் அன்சு பாட்டி ஆகிய வீரர்களைப் பார்வையாளர்கள் இனவெறியுடன் தூற்றிய காணொளிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

அத்துடன், ஸ்பெயினின் இனவெறி மற்றும் அந்நியர் பயத்திற்கான அவதானிப்பு மையம் (Spanish Observatory on Racism and Xenophobia) வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஸ்பெயினில் இணையவழி இனவெறித் தாக்குதல்களுக்கு அதிகம் இலக்கான வீரர்களாக லாமின் யமால் மற்றும் வினிசியஸ் ஜூனியர் (Vinicius Jr) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்பானிஷ் ஊடகமான மோவிஸ்டாருக்கு (Movistar) முன்னாள் அர்ஜென்டினா வீரர் ஜார்ஜ் வால்டானோ அளித்த செவ்வியின் போது, நேரடியாக இனவெறியை எதிர்கொண்டுள்ளீர்களா எனக் கேட்டதற்கு லாமின் யமால் பதிலளிக்கையில்:

“ஆயிரம் முறை எதிர்கொண்டுள்ளேன். மனிதர்கள் மறைமுகமாக இனவெறியுடன் நடந்துகொள்கிறார்கள், ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை. பல கருத்துகளும் பார்வைகளும் இனவெறி சார்ந்தவையாக இருக்கின்றன, ஆனால் அவர்கள் அதைத் தவறாகவே நினைப்பதில்லை.

யாராவது என்னை ‘கருப்பர்’ என்று அழைத்தால் அது என்னைக் சிறிதும் பாதிக்காது. ஏனெனில் அடிப்படையில் நான் கருப்பு நிறத்தவன், வேறு நிறம் அல்ல. ஆனால் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கூறுகிறார்களா இல்லையா என்பதே விஷயம்.

இருப்பினும், நான் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பார்ப்பதற்காகவே கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு வாங்கி வந்தவர்கள் என்னை அவமதித்ததற்காக நான் கோபப்படப் போவதில்லை” என்று அவர் கூறினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி